இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி,ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளீர் அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே இந்தப் போட்டியில், இந்த தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய மிதாலிராஜ் சேர்க்கப்படவில்லை என்று குற்ற குற்றசாட்டு எழுந்தது.

சமுக வலைதளத்தில் இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. காயம் காரணமாக அவர் கடைசி லீக்கில் ஆடவில்லை என்றாலும் காயத்தில் இருந்து குணம் அடைந்த பின்னும் அவர் சேர்க்கப் படாதது ஏன் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதற்கு பதிலளித்த மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்டபோது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்-க்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஹர்மன்பிரீத் கவுர்:

Advertisement

Advertisement

இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசியுள்ளார். கவுர், சூழ்ச்சியாக செயல் படுகி றார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியற்றவர் என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா.

Advertisement