மியா ஜார்ஜ்ஜா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

0
1470
Mia

நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார்.

ஆரம்பகாலத்தில் ஜிமி ஜார்ஜ் என்ற தனது சொந்த பெயரை திரைப்படத்திற்காக மியா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. மேலும், இவர் மலையாளத்தில் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : திமிரு வில்லன் நடிகர் மீது பாலியல் புகார்.! பிரபல நடிகை கொடுத்த ஷாக்.! 

- Advertisement -

குடும்பப் பாங்கான தோற்றம் இருந்தபோதும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. இருப்பினும் மலையாளத்தில் ஒரு தரமான நடிகையாக விளங்கி வருகிறார். மலையாளத்தில் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள மீனா தற்போது மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழில் இறுதியாக 2017 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் பின்னர் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தனது சொந்த மண்ணான மலையாளத்திலேயே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடித்த படங்களில் அழகான தோற்றத்தில் இருந்த மீனா தற்போது சற்று உடல் எடை கூடி பருமனாக மாறியுள்ளார். சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இப்படி மாறிவிட்டார் என்று மிகவும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement