கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #metooo மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடுத்த பாலியல் புகாரை அடுத்து பல பிரபலங்கள் மீதும் அடுத்தடுத்து #metoo புகார் வெடித்து வருகிறது.
அதிலும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு நடிகர்களை பற்றிய புகார்களை முன்வைத்தார். மேலும், இந்த #metoo புகாரில் நம்பமுடியாத பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள விநாயகம் மீது நடிகை ஒருவர் #metoo புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க : சன் தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா.!
இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் 25 வருடத்திற்கு மேலாக பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் விநாயகம். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு ‘ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பின்னர் தமிழில் சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகர் விநாயகம் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி என்பவர் , மீ டூ புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகியுளளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மிருதுளா தேவியை அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.