வீடியோ மூலம் கோரிக்கை வைத்த வேலம்மாள் பாட்டியின் கனவை அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. தற்போது இவருக்கு 90 வயதாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாம் கொரோனா கட்டத்தில் தமிழக அரசு தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக 2,000 மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கி இருந்தது.

இதை வேலம்மாள் பாட்டியும் பெற்று இருந்தார். 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருளை பார்த்த சந்தோஷத்தில் வேலம்மாள் பாட்டி பூரித்து போய் இருந்தார். வேலம்மாள் பாட்டியின் சிரிப்பு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதைத் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பகிர்ந்து ‘இந்த ஏழையின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்:

இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இவற்றை சரி செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இதனால் பாதிக்கப்பட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு இருந்தார்.

Advertisement

வேலம்மாள் பாட்டி வைத்த கோரிக்கை:

Advertisement

அப்படியே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேலம்மாள் பாட்டியையும் சந்தித்து பேசியிருந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனிடையே சமீபத்தில் வேலம்மாள் பாட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில் அவர், தனக்கு தங்க கூட வீடு இல்லை.

வேலம்மாள் பாட்டிக்கு வழங்கிய வீடு:

தமிழக அரசு சார்பில் எனக்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். பின் வேலம்மாள் பாட்டியின் கோரிக்கை தமிழ் செய்திகள் மூலம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து வேலம்மாள் பாட்டியை அதிகாரிகள் சந்தித்து இருந்தார்கள். பின் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அரசாங்கம் செய்தது:

அதுமட்டுமில்லாமல் வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கான உரிய ஆவணமும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், குடிசை மாற்றுவாரியத்துக்கு பயனர்கள் வழங்க வேண்டிய ரூ.76,000 நிதியை பாட்டியால் வழங்க முடியாது என்பதால் அதையும் அரசே வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement