பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு முதல்வர் முக ஸ்டாலின் செய்த விஷயம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

Advertisement

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து உள்ளனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

சர்ச்சையான மாரி செல்வராஜ் பேச்சு :

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்.கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை மாரி செல்வராஜ் வம்புக்கு இழுத்து இருக்கிறார்.

Advertisement

இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை குறித்து மாரி செல்வராஜ் பேசியது கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். அதே போல தேனி மாவட்டத்தில் வெற்றி திரையரங்கத்தில் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இந்த படம் ஜாதி கலவரத்தை தூண்டுவது போல இருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு கூட தொடரப்பட்டது.

Advertisement

படத்தை பார்த்த முதல்வர் :

இந்த நிலையில் இன்று வெளியான இந்த படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து இருகிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு ஸ்டாலின் தன்னை கட்டி தழுவி கொண்டாடியதாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு Mk ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement