உங்கள் படத்தை பார்த்து தான் என் படத்தின் வில்லனுக்கு அந்த பெயரை வைத்தேன் – செல்வாராகவன் குறித்து மோகனின் உருக்கமான பதிவு.

0
336
bakasuran
- Advertisement -

தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பகாசூரன்’ படத்தில் நடித்த செல்வராகவன் குறித்து இயக்குனர் மோகன் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகன் இயக்கத்தில் செல்வராகவன் :

இப்படி ஒரு நிலையில் இவர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று அறிவித்து இருந்தார் மோகன். மேலும், இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். மோகன் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது.

பகாசூரன் டீசர் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள செல்வராகவன் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ‘இயக்குனர் திரு செல்வராகவன் சார் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் பார்த்த பின் தான் சினிமா மீது எனக்கு மோகம் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் சார் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.

-விளம்பரம்-

மோகனின் உருக்கமான பதிவு :

என் முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம் தான்.. பின் திரெளபதி படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.. அவருடன் #பகாசூரன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன் :

அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன்.. அவரும் நடிகராக மட்டுமே இருந்தாரே தவிர ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை.. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.. அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட நீங்களே சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள்.. குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்று கொண்டு பகாசூரன் படத்தின் கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த பகாசூரன் திரைப்படம்.. காத்திருந்து பாருங்கள்..’

Advertisement