லியோ படத்தின் Falsh Back பொய் என்று லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது இதுகுறித்து மோகன் ஜி கருத்து தெரிவித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூலை செய்து இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லியோவில் உண்மையான கதையை பார்த்திபன் தன்னுடைய கண்ணோட்டத்தில் சொல்லவே இல்லை.அது ஹிருதயராஜின் சொன்ன கதை. படத்தில் இருந்து ஏதாவது சொல்லும்போது கதை முழுக்க முழுக்க அவருடைய கண்ணோட்டத்தில் இருந்ததாக ஒரு டயலாக் வரும். ஆனால், எடிட்டர் ஃபிலோவுடன் நடந்த வாக்குவாதத்தில் அந்த டயலாக்கை நீக்கிவிட்டேன். உண்மையில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் 40 நிமிடங்கள் இருந்தது.

Advertisement

ஆனால், அது படத்தில் வரவில்லை. கௌதம் மேனனின் கதாபாத்திரத்துக்கு நிறைய முக்கியத்துவம் படத்தில் சேர்த்து இருந்தேன். முதல் காட்சியில் அவர் துப்பாக்கியில் சுட தடுமாறுவார். ஆனால், கிளைமாக்ஸ் கட்சியில் சரியாக அதே துப்பாக்கியில் சுடுவார்.இது அவர் ஒரு அலார்ட் போலீஸ் என்பதை காட்டும். அது மட்டும் இல்லாமல் லியோ கதாபாத்திரம் சம்பந்தமாக அவருக்கும் தொடர்பு இருந்தது.

Advertisement

உதாரணமாக, விஜய், ஆரம்ப சண்டை காட்சிக்கு பிறகு அவர் கடையில் உட்கார்ந்து அழுவார். பின் பார்த்திபன் என்று யாராவது கூப்பிட்டால் திரும்பவே மாட்டார். இரண்டிலிருந்து மூன்று முறை கூப்பிட்டால் மட்டுமே திரும்புவார். இதற்கு காரணம் அவர் பார்த்திபன் இல்லை லியோவாக மாறுகிறார் என்பதை காண்பிப்பதற்காக தான். அதுமட்டுமில்லாமல் சில கேள்விகளுக்கு படத்தில் பதில் சொல்லாமலும் விட்டுவிட்டேன்.

மேலும், லியோ கதாபாத்திரத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு நிறைய லெவல்கள் இருந்தது. இனிவரும் LCU படங்களில் இந்த கதையை நிச்சயம் சொல்வேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் Seven Screen நிறுவனம் மன்சூர் அலிகான் பேசிய நீக்கப்பட்ட காட்சியின் வீடியோவை வெளியிட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் இயக்குனர் மோகன் ஜி ‘ தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வியாபார உத்தி. 500 கோடி வசூல் செய்தும் கூட படத்தை வியாபாரம் செய்ய புதிய திட்டத்தை போட்டு இருகின்றனர். இது மிகவும் புத்திசாலித்தனமானது. அனைத்து படங்களும் இந்த வியாபார யுத்தியை இந்த குழுவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Advertisement