தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இந்நிலையில் தான் இவர் இயக்கிய பகாசுரன் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மோகன் ஜி, பா ம க தலைவர் ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய நபர் என்பது பலர் அறிந்த உண்மை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் ராமதாசை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் மேஜைக்கு கீழ் இருந்த ஒரு பாட்டிலை சுட்டிக்காட்டி அது சரக்கு பாட்டில் என்று பலர் விமர்சனம் செய்தனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மோகன் ‘தேவையில்லாத சிலர் இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் உண்மையில் அது ஆலிவ் ஆயில் அவருடைய வயது உங்களுக்கு தெரியும் அதனால் அடிக்கடி அவர் ஆலிவ் ஆயிலை தன்னுடைய உடலில் தேய்த்துக் கொள்வார் என்னிடம் அவர் ஒரு அரை மணி நேரம் பேசினார் அதில் ஒரு 20 நிமிடம் உன்னுடைய படங்களில் மது பாட்டில்களை காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் போன்று ஒரு காட்சியும் வைக்காதே என்று சொன்னார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

சோசியம் மீடியாக்களில் தன்னை குறித்து விமர்சனங்கள் வரும்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தால் அது உண்மை என்றாகிவிடும் என்ற காரணத்திற்காக நான் அந்த கருத்துகளுக்கு பதில் கூறி வருகிறேன். திரைப்படங்களில் சர்ச்சையான விஷியாயங்கள் மற்றும் காட்சிகளை வைப்பது மக்களை கவருவதற்காக அல்ல மக்களுக்கு புரிதல் ஏற்படுத்துவதற்காக. சமுதாயத்தில் என்னை சுற்றி இருக்கும் விஷியங்களை படமாக்குவது எனக்கு பிடித்திருக்கிறது.

Advertisement

திரெளபதி படத்திற்கு பிறகு பதிவாளர் அலுவலகத்திற்குள் மூன்றாம் நபர் வரக்கூடாது என்றும் cctv வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது என்னுடைய படத்தினால் என்று சொல்லவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு ஏற்பட்டுள்ள மற்றம் எனக்கு மகிச்சி அளிக்கிறது. மேலும் பேசிய அவர் தன்னை வைத்து பாஜக, பாமக வளரவில்லை என்றும் அவர்கள் ஏற்கனவே பெரிய காட்சிகளாக வளர்ந்து விட்டன எனவே என்னை வைத்தும் வளரும் அவசியம் அவர்களுக்கு கிடையாது என கூறினார்.

Advertisement