தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது.

மேலும் மோகன் ஜி இயக்கம் அனைத்து படங்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தவறாக சித்தரிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டில் இருந்தது. அதேபோல மோகன் இவரது ஜாதியை ஆதரித்து படத்தை எடுக்கிறார் என்ற அவர் குற்றச்சாட்டும் எழுந்தது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்து விட்டார்கள் என்ற ஒரு விமர்சனம் எழுந்தது.

Advertisement

அப்போது கூட தனது கருத்தை தெரிவித்த மோகன் ”பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இப்படி இவர் ஜெய் பீம் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில் மோகன் மகள் ஜெய் படம் குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர், மோகனின் மகளிடம் ‘நீ அப்பாவோட படம் எல்லாம் பாப்பியா, உனக்கு ரொம்ப புடிச்ச படம் எது’ என்று கேட்க, அதற்கு மோகனின் மகள் ‘ஜெய் பீம் எங்க அப்பா படம் தான்’ என்று கூறியுள்ளார். உடனே மோகன், ஜெய் பீம் அவளுக்கு ரொம்ப புடிக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement