மலையாள நடிகர்களின் சம்பளப் பட்டியல் – நயன்தாராவை விட கம்மியாக சம்பளம் வாங்கும் டாப் 4 நடிகர்கள்.

0
5433
- Advertisement -

வருடம் வருடம் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்திலும் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை பட்டியல் இடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்களின் பட்டியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் டாப் 4ல் இருக்கும் நடிகர்கள் நயன்தாராவை விட கம்மியாக தான் சம்பளம் வாங்குகின்றனர் அதை பற்றி பார்ப்போம்.

-விளம்பரம்-

ஃபஹத் ஃபாசில்:

- Advertisement -

படத்துக்கு படம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி சிறந்த நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஃபஹத் ஃபாசில். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவர் மலையாள நடிகர்களின் சம்பளப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்து உள்ளார்.

துல்கர் சல்மான்:

-விளம்பரம்-

இவர் மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தப் பட்டியலில் இவர் ஐந்தாம் இடம் பிடித்து உள்ளார். இவர் 80 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

நிவின் பாலி:

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் புகழ்பெற்றவர் நிவின் பாலி. இவருடைய படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் இடம் பெரும். இவருடைய சம்பளம் ஒன்று முதல் இரண்டு கோடிக்கு உயர்ந்துள்ளது. இவர் நான்காம் இடம் பிடித்து உள்ளார்.

பிருத்விராஜ்:

சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் பிருத்விராஜ். Driving License, அய்யப்பனும் கோஷியும் படங்களின் வெற்றியின் மூலம் தற்போது இவர் ஏறுமுகத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பிருத்விராஜ் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து உள்ளார்.

மம்முட்டி:

பல ஆண்டு காலமாக பாக்ஸ் ஆபிசில் மம்முட்டியின் ஆதிக்கம் இருந்து கொண்டு உள்ளது. கதை பிடித்திருந்தால் சம்பளமே இல்லாமல் கூட நடிப்பது மம்முட்டியின் ஸ்டைல். அதேசமயம் அவர் சம்பளம் 4 முதல் 5 கோடி வரை நிர்ணயிக்கப்படுகிறது. இவர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளார்.

மோகன்லால் :

Superstar Mohanlal is 60 years 'young' | Mohanlal| actor Mohanlal

கடந்த 40 ஆண்டுகளாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் மோகன்லால். இந்தப் பட்டியலில் இவர் முதல் இடத்தை பிடித்து உள்ளார். மலையாள திரையுலகில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 5 கோடி முதல் 8 கோடி வரை இவர் சம்பளமாக பெறுகிறார். இவருடைய படங்களுக்கு பிற மொழிகளிலும் வெளிநாடுகளிலும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இன்றும் மலையாளத்தின் நம்பர் 1 நாயகனாக இவர் வலம் வருகிறார்.

Advertisement