தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ்.
அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகமெங்கும் இப்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறாராம். ஏற்கனவே, தொடங்கப்பட்ட இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரபல ஸ்பானிஷ் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ விஜய் குறித்து பேசியிருக்கிறார். ஸ்பானிஷில் செம பாப்புலரான வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’. இந்த வெப் சீரிஸின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ அளித்த பேட்டி ஒன்றில், ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் இந்தியன் வெர்ஷனில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விக்கு “ப்ரொஃபஸர் கேரக்டர் – விஜய், பெர்லின் கேரக்டர் – ஷாருக்கான், பொகோட்டா கேரக்டர் – அஜித், சுவாரஸ் கேரக்டர் – சூர்யா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பதில் அளித்திருக்கிறார்.