தன் வீட்டில் விநாயகர் ஓவியத்திற்கு முன்பாக நின்று புகைப்படத்தை வெளியிட்ட Money Heist பிரபலம்.

0
543
moneyheist
- Advertisement -

வளர்ந்து வரும் நவீன சினிமாவிற்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பல மொழி ‘வெப் சீரிஸ்’ எல்லாம் ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘வெப் சீரிஸ்’ தான் Money Heist. இந்த தொடர் உலகளவில் மிக பிரபலமானது.
அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ்.

-விளம்பரம்-
Money Heist - Netflix Series - Where To Watch

இந்த வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் என்பதே கதை. இந்த கதையில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா, சுவாரஸ், டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த Money Heist தொடரில் நடித்த அனைவரும் உலக அளவில் பிரபலமடைந்தார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

Money Heist நடிகை வீட்டில் விநாயகர் படம் :

மேலும், இந்த தொடர் இந்தியாவில் அதிகம் வரவேற்ப்பை பெற்றிருந்தது. மொத்தம் இந்தத் தொடர் 5 சீசன்களை கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் 5வது சீசன் கூட வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த தொடரில் நடித்த நடிகை எஸ்தர் அசிபோ உடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தன்னுடைய வீட்டில் தமிழர்களின் முதல் கடவுளான விநாயகரின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

PHOTOS : மனி ஹெய்ஸ்ட் தொடர் நடிகையின் வீட்டில் விநாயகர் புகைப்படம்... ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த நடிகை... படங்கள் இதோ!

பாராட்டும் இந்திய ரசிகர்கள் :

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் அவருடைய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு கூறியது, நடிகை எஸ்தர் அசிபோ ஒரு ஸ்பானிஸ் நடிகை. இருந்தும் அவர் வீட்டில் விநாயகர் கடவுளின் வழிபாடு இருப்பது பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார் என்பது பாராட்டுக்குரிய ஒன்று.

-விளம்பரம்-

வைரலாகும் புகைப்படம் :

இதை பார்க்கும்போது இந்தியாவிற்கு பெருமையாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இவரின் டுவிட்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.
மேலும், இந்த Money Heist தொடர் இந்தியில் ரீமேக் செய்திருந்தார்கள். இந்தியில் three monkeys என்று பெயரிடப்பட்டது.

Money Heist தொடர்ச்சி :

image

இதை இயக்குனர் duo Abbas-Mustan.இயக்கியிருந்தார். மேலும், இந்த Money Heist தொடர் பல விருதுகளை பெற்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த தொடரின் 5வது சீசன் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்தத் தொடருக்கு ’பெர்லின் ஸ்பின் ஆஃப்’ என்று தலைப்பிட்டுள்ளார்கள். நெட் ஃப்ளிக்ஸில் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement