அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- ‘தளபதி 69’ படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

0
360
- Advertisement -

விஜய் உடன் ‘தளபதி 69 படத்தில்’ குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இதை அடுத்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

தளபதி 69 படம்:

இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. மேலும், விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய் படத்தில் மோனிஷா:

இவர்களுடன் இந்த படத்தில் மமிதா பைஜி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை அண்மையில் தான் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மோனிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

மோனிஷா குறித்த தகவல்:

அதற்கு முன் இவர் kpy நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை ரோலில் மோனிஷா நடித்தார்.

மோனிஷா பதிவு:

அதன் பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினுடைய பூஜையில் பட குழுவினருடன் மோனிஷாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர் விஜயுடன் கை கொடுத்து போட்டோவையும் எடுத்து இருக்கிறார். இதை மோனிஷா சோசியல் மீடியாவில் பகிர்ந்து, விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு. அது நிறைவேறிவிட்டது என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement