தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. 1999-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘வாலி’. இது தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தில் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதுவும் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘குஷி’ என்ற படத்தினை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் அவதாரம் எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. ‘நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இசை, இறைவி, ஸ்பைடர், மெர்சல்’ போன்ற பல படங்களில் நடித்தார்.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் பில்லோ வியர் சேலஞ்சை செய்து புகைப்படத்தை நீக்கிய சுரபி. இதான் அந்த புகைப்படம்.

Advertisement

கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். தற்போது, இப்படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

மான்ஸ்டர் படப்பிடிப்பில் நெல்சன் மற்றும் படக்குழுவினர்

அந்த பதிவில் “எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்ற பாடல் இப்போதும் என் ப்ளேலிஸ்டில் இருக்கிறது. இந்த படத்தினை புதுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் எனது அம்மா மற்றும் சகோதரியுடன் சேர்ந்து பார்த்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. பின், திடீரென எஸ்.ஜே.சூர்யாவுடனே இணைந்து ‘மாஸ்டர்’ என்ற படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இதையும் பாருங்க : பொண்ணா பொறந்தா இதை கடந்து தான் போகணும்- திருமண வீடீயோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்ட அறந்தாங்கி நிஷா.

Advertisement

விஜய் மற்றும் நடிகை மும்தாஜ் நடனமாடியுள்ள ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ ரொம்ப சூப்பரான ஒரு பாடல்” என்று இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பதிவிட்டிருக்கிறார். இப்போது நடிகராக ‘பொம்மை, மாநாடு, உயர்ந்த மனிதன்’ என மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது தவிர எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘இறவாக்காலம்’ ஆகிய இரண்டு படங்களின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

Advertisement
Advertisement