லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்று அறிவித்த போது பலரும் ‘என்னது நயன்தாரா அம்மனா’ என்று கேலி செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மாடர்ன் அம்மனாக கச்சிதமாக பொருந்தியுள்ளார் நயன்தாரா. சாமி பெயரை சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்கள், சாமி நம்பிக்கையால் ஏமாறும் மக்கள் போன்றவற்றை மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் பரிட்சியமான பல பரிட்சயமான முகங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில பரிட்சயம் இல்லாத முகங்களும் நடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ‘தெய்வா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ம்ரிதி வெங்கட். இவர் இந்த படத்தில் குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் ஒரு பெண்ணாக நடித்திருப்பார். அதிலும் ஆர் ஜே பாலாஜி, உனக்கு என்ன வேணும் கேள் என்று சொல்லும் போது ‘எனக்கு ஒரு நாள் லீவ்’ வேணும் என்று கூறுவார்.
அந்த காட்சி படத்தில் மிகவும் ஒரு எமோஷனல் சீனாக இருந்தது. இவர் ஏற்கனவே தடம், பற்ற வைத்த நெருப்பொன்று போன்ற படங்களில் நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது இவர் சிபி ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.