அண்ணா பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய அலப்பறையான போஸ்டர் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
2096
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவருக்கென்று தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல கடந்த சில காலமாகவே விஜய் படங்கள் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதற்கு மாஸ்டர் படமும் விதிவிலக்கு கிடையாது. கடந்த சில காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் விஜய் படங்கள் வெளியாகும்போது சில அரசியல் குறுக்கீடும் வருகிறது.மேலும், நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்களில் இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் பேசிய சில கருத்துக்கள் அரசியல்வாதிகளை தாக்குவது போல இருந்தது. இதனால் விஜய்யை பல்வேறு அரசியல் பிரபலங்களும் விமர்சிக்க துவங்கினார்கள்.

இதையும் பாருங்க : பிக்பாஸ் 5க்கு பிரியங்கா செல்வது உறுதி – விஜய் டிவியே ஹிண்ட் கொடுத்திருக்காங்க பாருங்க.

- Advertisement -

மேலும், இவரது படங்களுக்கு வேண்டுமென்று பிரச்சனையை சில அரசியல் கட்சியினர் ஏற்படுத்துவதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். ஆனால், விஜய்யின் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக எப்போதும் இருந்து வருகிறார்கள். எப்போதெல்லாம் விஜய் பிரச்சனைகளை சந்திக்கும் போது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு குவிந்து விடுகிறது.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா உருவத்தை மார்ஃபிங் செய்து விஜய்யின் படத்தை வைத்து ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

 போஸ்டரில், நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்… எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா என்று குறிப்பிட்டு, கீழே கரு சுந்தரராஜன் மதுரை தெற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று குறிப்பிடபட்டு இருக்கிறது.

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ விஜய் ரசிகர்களை நெட்டிசன்கள் படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இதுபோல போஸ்டர்களை ஒட்டுவது முதன் முறை அல்ல, ஏற்கனவே விஜய்யை, எம் ஜி ஆருடன் ஒப்பிட்டு கூட போஸ்டர்களை ஒட்டி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement