17 வயதில் திருமணமா, இரு போலீஸ் கிட்ட சொல்றோம் – மௌன ராகம் சக்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
2165
raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர். அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ப்பா, தாமுவா இது ? இளம் வயதில் எவ்ளோ ஸ்லிம்மா இருந்திருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதே போல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் சக்தியாக நடித்து வரும் ரவீனாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் அது தொடர்பான ப்ரோமோவும் வெளியானது. இதில் சக்தி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று ஒரு புறம் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தாலும் உண்மையில் 17 வயது ஆகும் ரவீனாவிற்கு திருமணமா, அப்போ இது குழந்தை திருமணம் தானே என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement