தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர். அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : நடிகை எமி ஜாக்சனா இது ? இந்த போட்டோவை இது வரை நீங்க பார்த்திருக்கீங்களா.
அதே போல இவர் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார்.அந்த குழந்தை தான் ரவீனா தஹா என்று பலரும் அறியாத ஒன்று.
தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி வந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.