பணம் கொடுத்தவனுக்கு எவ்ளோ வலிக்கும். உனக்கு வெக்கமா இல்ல இப்படி சொல்ல – இளம் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
12959
raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரவீனா தாஹா. தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர்.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார். அதே போல இவர் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும்.

- Advertisement -

அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார்.அந்த குழந்தை தான் ரவீனா தஹா என்று பலரும் அறியாத ஒன்று. ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2வில் நடித்து வருகிறார். சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

பொதுவாக சமூக வலைத்தளத்தில் இருக்கும் பிரபலங்கள் சிறு தொழில் செய்வோர்களின் பொருட்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் செய்வது வழக்கம். அப்படி செய்யும் விளம்பரங்களுக்கு பிரபலம் மற்றும் பாலோவர்களை பொறுத்து இவர்களுக்கு பணமும் வழங்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரவீனா தாஹா, ஆடை ஒன்றை அணிந்து, இந்த சட்ட குடுத்தது யாருங்க, கொஞ்சம் மெசேஜ் பண்ணுங்க யாருன்னு தெரியல என்று பதிவிட்டு சில எமோஜிக்களையும் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த பலரும் உங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்ய சொன்ன நபரை பணம் வாங்கிக்கொண்டு ஆடையும் வாங்கிக்கொண்டு அவரை யார் என்று கூட தெரியாமல் இருப்பது அசிங்கம் இல்லையா. அவர் இடத்தில் நீங்கள் இருந்து இதே போல அவரும் சிரித்துகொண்டே போட்டால் அப்போது தெரியும் அந்த வலி என்று பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் ரவீனா, அந்த ஆடையை அனுப்பியவரின் பெயரை போட்டு மற்றொரு பதிவை போட்டார்.

Advertisement