முன்னணி நடிகரின் படத்தில் பிரபல நடிகையின் மகளாக அறிமுகமாகியுள்ள மௌன ராகம் சக்தி – வீடியோ இதோ.

0
1124
Mounaragam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் தான் மௌன ராகம். இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்டது. இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்துஇருந்தார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் பேபி கிருத்திகா.

இதையும் பாருங்க : பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை வெளிக்காட்டிய பாலாஜி – இவர் தானா அது. குஷியில் ரசிகர்கள்.

- Advertisement -

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுஇருந்தது . இதுவரை 863 எபிசோடுகளை கடந்து இருந்த நிலையில் இந்த சீரியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்கியது. இதில் சக்தியாக கிருத்திகாவிற்கு பதிலாக பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் ரவீனா நடித்து வருகிறார். மௌன ராகம் சீரியலுக்கு பின்னர் கிருத்திகாவை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை.

இப்படி ஒரு நிலையில் விஷால் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார் கிருத்திகா. புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் சீரியல் நடிகை நீலிமாவும் நடித்துள்ளார். அவருக்கு மகளாக பேபி கிருத்திகா நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement