முறையில்லாமல் எங்கள் சினிமாப் பட தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்- தயாரிப்பாளர் விளாசல்.

0
2378
serial
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் வெள்ளித்திரையில் ஒளிப்பரப்பாகும் படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனாலேயே தற்போது ஒவ்வொரு சேனலிலும் புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் திரைப்படங்களின் தலைப்பை வைத்து வருகிறது.

-விளம்பரம்-
Image result for eeramana rojave serial

- Advertisement -

அந்த தலைப்புகளில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் கூட மக்கள் சீரியலை கவனிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சினிமா உலகில் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகியுமான கேயார் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, சின்னத்திரை தொடர்களால் தற்போது சினிமா படங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல் தொடர்களுக்கு வைக்கப்படும் சினிமா படங்கள் பெயர்கள் எல்லாம் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் வைக்கப்படுகிறது.

இதையும் பாருங்க : ‘ரொம்ப பந்தா காட்ட விரும்பல’ மேடையில் நடனமாடிய அஜித். பழசு தான் ஆனாலும் செம சார் இந்த வீடியோ.

-விளம்பரம்-

சினிமாவில் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமான படங்களின் தலைப்புகளை சீரியலுக்கு வைப்பதை தற்போது வாடிக்கையாக வைத்து உள்ளார்கள். ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு வைப்பது என்பது முக்கியமான ஒன்று. அந்த படம் வெற்றி அடைவதற்கு ஒரு அங்கமாக அந்த படத்தின் தலைப்பு உள்ளது. மேலும், ஒரு படத்திற்கு முக்கியமே அங்கமாக இருப்பது தலைப்பு தான். தயாரிப்பாளருக்கு மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் படத்தின் தலைப்பு தான் அங்கீகாரம். ஆனால், தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா படங்களின் தலைப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

Image result for கேயார் தயாரிப்பாளர்

என்னுடைய படங்களான ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளை தற்போது சீரியலுக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். சீரியலுக்கு இந்த தலைப்புகள் சம்பந்தமாக யாரிடமும் சீரியல் நிறுவனம் முறையாக அனுமதியும் வாங்க வில்லை. முறையில்லாமல் எங்கள் சினிமாப் பட தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் சீரியல் எடுப்பது மிக வேதனையாக இருக்கிறது. இது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது. டிவி தொடர்களுக்கும் சினிமாவைப் போல் தணிக்கை இருந்தால் இப்படிப்பட்ட முறைகேடுகளை தவிர்க்கலாம். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement