பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் காலணிகளை பாதுகாக்க வைத்த மத்திய பாதுகாப்பு படையினரிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற எம்பி மாணிக் தாக்கூர் கூறினார். அண்ணாமலை தற்போது பாதயாத்திரையை நேற்று கொடைக்கானலில் மேற்கொண்டு வந்தார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை பாதுகாக்க மத்திய அரசு அவருக்கு z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதனை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் எம்பி குற்றம்சாட்டினார்.

Z பிரிவு பாதுகாப்பு:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு  இஸ்டுகள் மற்றும் மாத தீவிரவாதிகளிடமிருந்து உளவுத்துறை அறிக்கை கூறியதை எடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவரைப் பாதுகாக்கும் மொத்தமாக 33 சிஆர்ஐ கமெண்டர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் உளவுத்துறையின் அறிக்கை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உள்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளது அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது அவர் பாதுகாக்கும்  33 வீரர்கள் பாதுகாப்பவர்கள் என்றும் மத்திய அரசு கூறியது.  இதன் படி அண்ணாமலையின் பாதையாத்திரைகளும் அவர் எங்கு சென்று வந்தாலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பானது வழங்கப்பட்டு வருகிறது.    

Advertisement

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225 ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

Advertisement

எம் பி குற்றச்சாட்டு

அண்ணாமலைக்கு எந்த விதத்திலும் பிரச்சினை இல்லாத பாதுகாப்பாகத்தான்  z பிரிவு கமாண்டர்களை வைத்து மத்திய அமைச்சர் பாதுகாத்து வருகிறார். அதன் விளைவாக அண்ணாமலை அவருடைய செருப்பை பாதுகாப்பதற்கான வேலையை CRPF வீரர்களிடம் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த செயல் இருப்பதால் பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கூற வேண்டும். இதைப் பற்றி ஒரு துறை அமைச்சர்  அமித்ஷாக்கு உண்மைகள் தெரிய கடிதம் எழுத உள்ளேன் என்று மாணிக் தாகூர் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement