தமிழ் சினிமா உலகில் லாஸ்லியா, ‘ஜம்ப் கட்ஸ்’ ஹரிபாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படத்தை ஸ்ரீ தேன் ஆண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் லாஸ்லியா கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். இவரை துரத்தி துரத்தி ஹரிபாஸ்கர் காதலிக்கிறார். ஆனால், லாஸ்லியா அவருடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் அவர், காலேஜ் முடித்து நான்கு ஆண்டுகளில் வேறொரு பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவேன் என்றெல்லாம் லாஸ்லியாவிடம் சவால் விடுகிறார். அதன் பின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹரிபாஸ்கர் ஒருதலையாக ஒருவரை காதலித்தார்.
அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருடன் திருமணமாகிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால், ஹரியை காப்பாற்றி விடுகிறார்கள். இதனால் அவருடைய நண்பர் ஹரிபாஸ்கரை வெளியே அழைத்து செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு
ஹரி பாஸ்கர் செல்கிறார். அப்படி அவர் செல்லும் வீடு லாஸ்லியாவது தான். இதை தெரிந்து ரெண்டு பேருமே அதிர்ச்சி அடைகிறார்கள்.
அவர் லாஸ்லியா வீட்டிலேயே வேலை செய்து கொண்டு அவரை மீண்டும் காதலிக்க முயற்சிக்கிறார். ஹரியை புரிந்து கொண்டு லாஸ்லியா பெஸ்டியாக பார்க்கிறார். ஆனால், ஹரி
தன்னை மீண்டும் காதலிக்கிறார் என்ற உண்மை லாஸ்லியாவுக்கு தெரிய வருகிறது. அதற்கு பின் என்ன ஆனது? இருவர்களும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. youtubeல் ஜம்ப் கட்ஸ் என்ற சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் ஹரி பாஸ்கர்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே இவருடைய காமெடி, நடிப்பு, எமோஷனல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அறிமுகப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவருடைய நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது.
இவரை அடுத்து லாஸ்லியா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். படத்தினுடைய பலமே கதைக்களம் தான்.
காமெடி மட்டும் இல்லாமல் காதல், குடும்பம், எமோஷன் என அனைத்தையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஆனால், சில இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில காட்சிகள் நீளமாக இருக்கிறது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் சில youtube நட்சத்திரங்களும், வளர்ந்து வரும் நடிகர்களுமே நடித்திருக்கிறார்கள். படத்திற்கு பின்னணி இசை பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் இருக்கிறது.
நிறை:
ஒரே நேர்கோட்டில் இயக்குனர் கதையை கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்
தொய்வில்லாத கதைக்களம்
ஹரிபாஸ்கர், லாஸ்லியா நடிப்பு
காமெடி, காதல் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – முயற்சி