பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர், ‘திரைப்படங்களைப் பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம்’ என்று சொன்ன கருத்து தான் இப்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணசித்திர நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்இவர் டப்பிங் கலைஞரும் ஆவார். அவரது வாழ்க்கை ஒரு நாடாக கலைஞராக தொடங்கியது.
மேலும், 1987-ல் ‘திருமதி ஒரு வெகுமதி’என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 1990களில் பல சிறிய படங்களில் நடித்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.நடிப்பு மட்டுமில்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். சின்னத்திரையிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி, அரசி போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் இவர்.
விழாவில் எம்.எஸ். பாஸ்கர்:
சமீபத்தில் நடிகர் விதார்த் நடித்துள்ள ‘லாந்தர்’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். அதில் பேசிய அவர், பொதுமக்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். ஒரு படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களுடனே அதை வைத்துக் கொள்ளுங்கள். படம் பார்க்க செல்பவர்கள் இடம், ‘அந்தப் படம் நல்லா இல்லை பார்க்க போகாதீர்கள்’ என்று சொல்லாதீர்கள்’ என்று பேசியிருந்தார்.
எம்.எஸ். பாஸ்கரின் அட்வைஸ்:
மேலும் எம்.எஸ் .பாஸ்கர், ஒரு படம் எடுப்பதற்கு எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?. நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ பேர் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரை கூட இழந்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு படம் எடுப்பதில் பல கஷ்டங்கள் உண்டு என்றும் கூறியிருந்தார்.
படங்களை விமர்சிக்க வேணாம்:
அதுபோல் கஷ்டப்பட்டு எடுக்கும் படங்களை உங்களிடம் செல்போன் இருக்கும் ஒரே காரணத்தால், தியேட்டர்களில் அமர்ந்து கொண்டு படம் மொக்க என பதிவிடாதீர்கள். அதேபோல், ‘ இந்தப் படத்துக்கு தயவு செய்து வந்து விடாதீர்கள்’ என்றும் சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியா இருங்க. மத்தவங்க பார்க்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சிறிய படங்களில் நடிப்பதற்கு காரணம்:
தொடர்ந்து பேசிய அவர், ஒரு படத்துக்காக செலவளிகாகும் 120, 200 ரூபாய்ல யாரும் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டப் போவதில்லை. அதனால எல்லா படங்களையும் நிறைய பேர் வந்து பார்த்தா தான், பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும் எம்.எஸ். பாஸ்கர் சிறிய படங்களில் மட்டும் நடிப்பதற்கு காரணம் கூறுகையில், ‘சிங்கத்துக்கு வாலா இருப்பதைவிட, ஈக்கு தலையாக இருப்பதை தான் நான் விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.