‘அன்று விஜய்-தோனி, இன்று விக்ரம்-தோனி சந்திப்பு’ தொடர்ந்து கோலிவுட் நட்சத்திரங்களின் சந்திப்பின் பின்னணி என்ன? உற்சாகத்தில் ரசிகர்கள்.

0
744
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் வித்யாசமான கதைக்காக தன் உடலையும் வருத்தி எந்த நிலைக்கும் செல்பவர் விக்ரம். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மகான். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக இணைந்து நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வம்.

-விளம்பரம்-

சிவாஜி கணேசன்- பிரபு, சத்யராஜ்- சிபிராஜ், கார்த்திக்- கௌதம் கார்த்திக் என சில கூட்டணி வரும். அந்த வரிசையில் தற்போது விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்திருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் மகான். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

விக்ரம் நடிக்கும் படங்கள்:

மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. அதேபோல் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் எல்லாம் விக்ரம் நடித்து முடித்து விட்டார். இந்த படங்கள் எல்லாம் கூடிய விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் தோனி- விக்ரம் சந்திப்பு நடந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விக்ரமுக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடித்த விளையாட்டு. அதோடு தோனியின் தீவிர ரசிகர்.

விஜய் – தோனி சந்திப்பு:

பல பேட்டிகளில் ‘தோனி ஒரு சூப்பர் ஹீரோ’ என்றெல்லாம் விக்ரம் பெருமையாக பேசி இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றாலும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். அவர் நடிக்கும் விளம்பரங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னையில் தான் நடந்து வருகின்றன. அப்படிதான் விஜய் – தோனி சந்திப்பு நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விஜயின் பீஸ்ட் ஸ்பாட்டில் கிரிக்கெட் வீரர் தோனி- விஜய் இருவரும் சந்தித்தனர்.

-விளம்பரம்-

தோனி – விக்ரம் சந்திப்பு:

அவர்களின் சந்திப்பு இரு ரசிகர்கள் மத்தியிலும் பயங்கரமாக கொண்டாடி இருந்தார்கள். இந்த சந்திப்பு மகிழ்ச்சி முடிவதற்குள் சியான் விக்ரம் – தோனி சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தான் தோனி – விக்ரம் சந்திப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த ஹோட்டலில் இருந்த விக்ரம் தோனியை பார்க்கிறார். அங்கு வந்த தோனியும் விக்ரமை பார்த்து விட ரெண்டு பேரும் சந்தோஷமாக பேசி கொள்கிறார்கள். பின் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார்கள்.

கோப்ரா படத்தில் இர்பான் பதான் பற்றி விக்ரம் கூறியது:

அப்போது இர்பான் பதான் கோப்ரா படத்தில் நடித்த விஷயத்தை டோனியிடம் விக்ரம் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு தோனி ஆச்சர்யப்பட்டு இர்பான் பதான் நடிப்பு குறித்து கேட்டு அறிந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தோனியும் கூடிய விரைவில் கோலிவுட்டில் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். தோனி கோலிவுட்டுக்கு வருவாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement