மக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா.! என்னங்க சார் உங்க சட்டம்.!

0
1075
Mugilan

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர், சமூக ஆர்வலர் , விவசாய போராளி என்று பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்ட இவர், தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

அனால், கடந்த சில மாதமாக இவரை காணவில்லை. இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் முகிலனின் மனைவி புகார் அளித்திருந்தார் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கடந்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் போலீசார் கூறியிருந்தனர்.

இதையும் பாருங்க : மகளை விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தை கூறிய சாண்டியின் மனைவி.! 

- Advertisement -

இந்நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது.முகிலனின் நண்பர் கொடுத்த தகவலின்படி பின்னர் ஆந்திர போலீசால் கைப்பற்றபட்டார் முகிலன்.

அதன் பின்னர் முகிலன் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், முகிலனை பார்க்க ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து அவரது மனைவி பூங்கொடி சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் வந்த கார் கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கியது. இதில், லேசான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து எதிர்பாராத விபத்து என்று கூறியுள்ள போலீஸ் தரப்பினர், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பது தெரியவில்லை.Advertisement