முகேஷ் அம்பானிக்கு பிறந்த வாரிசு – டபுள் சந்தோசத்தில் அம்பானி குடும்பம். என்ன தெரியுமா ?

0
559
Ambani
- Advertisement -

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான நபர்.

-விளம்பரம்-

இவர் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் அதிகம் பங்குகளை உடையவரும் மற்றும் தலைவரும் ஆவார். அது மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் இவர்தான். மேலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல் அதன் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது.

- Advertisement -

முகேஷ் அம்பானி தொழில்கள்:

இதனை அடுத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாய் துறை உரிமையாளரும் முகேஷ் அம்பானி ஆவார். இப்படி பல கம்பெனிகளின் ஓனராகவும், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் முகேஷ் அம்பானி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நீடாமானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷா, ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி குடும்பம்:

இவர்கள் மூன்று பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது. மேலும், ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்’ என்ற சாதனையை அம்பானியின் மகள் இஷா திருமணம் படைத்து இருக்கிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் மகள் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

இஷா திருமணம்:

இதில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் ரூ.722 கோடியில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்பானியின் மகள் இஷாவிற்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

இஷாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்:

அதாவது, நவம்பர் 19ஆம் தேதி அன்று இஷாவிற்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. அதில் ஒரு குழந்தை பெண், மற்றொரு குழந்தை ஆண். பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். தற்போது தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் இஷாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement