கெத்து காட்டிய மும்தாஜ் ஆர்மி..! நீங்க தான் வின்னர்..! புகைப்படம் இதோ.!

0
263
Mumtaz

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த வீட்டுக்குள் மும்தாஜ் மீது சில பல புகார்கள் வாசிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவாக நெகடிவ் இமேஜ் இல்லாததால் இவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது, குறிப்பாக அவரது ஆர்மிக்கு.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜைச் சந்திக்க முடிவு செய்த அவரது ஆர்மியைச் சேர்ந்த ரசிகர்கள் (மும்தாஜ் ஆர்மி-தமிழ்நாடு) ஒன்று திரண்டு அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தனர். அந்த விழா நேற்றைய தினம் (22/9/18) திருவள்ளூரில் நடந்தது.

அம்மா, அண்ணன் குழந்தைகள் என குடும்பத்தினருடன் மும்தாஜ் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு மும்தாஜுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான மமதி சாரி, ரம்யா என்,எஸ்.கே., வைஷ்ணவி ஆகியோருடன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தியும் வந்திருந்தார்.

பிரியாணி விருந்துடன் களைகட்டிய நிகழ்வின் இறுதியில், ‘’நீங்க டைட்டில் தராவிட்டால் என்ன பிக் பாஸ்.. எங்க தலைவிக்கு நாங்க தர்றோம், ’மக்களின் வின்னர்’ என்கிற டைட்டில்’ என அதிரடியாக அறிவித்த ரசிகர்கள், அந்தப் பட்டத்தைச் சூட்டிய போது மும்தாஜ்வின் முகம் முழுக்கப் பூரிப்பு.