இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான முண்டாசுப்பட்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட், ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். 2011 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக வந்தது தான் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்தை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவரிடம், ஏன் அந்த ஊருக்கு முண்டாசுப்பட்டி என்று பெயர் வைத்தீர்கள்?
இது எல்லாம் 80 காலகட்டத்தில் நடந்த கதை. நாங்க அந்த காலத்தில் பயன்படுத்தின பொருள்கள் வேண்டும் என்று முடிவு செய்தோம்.

Advertisement

இந்த படத்தில் முக்கியமானதே விக். கோபி, அழகுமணி கதாபாத்திரத்துக்கு விக் வாங்குறதுக்கு ஒரு நாளுக்கு 600 ரூபாய் ஆனது. அப்போ அந்த ஊர் மக்களுக்கும் விக் வைக்க வேண்டும் என்றால் 50 விக் வாங்கணும். ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது பட்ஜெட் இல்லை. அதனால் எல்லோருக்கும் முண்டாசு கட்டிவிட்டு பண்ணோம். அதனால் ஊருக்கு முண்டாசுப்பட்டி என்று பெயர் வைத்தேன்.

இது சினிமாவாக மாறும்போது வானமுனி சாமிக்கே முண்டாசு கட்டிவிட்டு அதனால் ஊரூலில் இருக்கிற எல்லோரும் முண்டாசு கட்டி செட் பண்ணிட்டேன் என்று கூறி இருக்கிறார். படத்தின் பட்ஜெட்டை வீணடிக்கும் இயக்குனர்கள் மத்தியில் வெறும் துண்டை மட்டும் பயன்படுத்தி தயாரிப்பாளரின் தலையில் துண்டு விழாமல் பார்த்துள்ளார் ராம்குமார்.

Advertisement
Advertisement