சர்கார் கதை திருட்டு விவகாரம்..!முருகதாஸ் வெளியிட்ட வீடியோ …

0
204
Murugadoss

சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரம் தான் இன்றைய ஹாட் நியூஸாக இருந்து வருகிறது. உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் “செங்கோல்” பெயரில் ஏற்கனவே பதிவு செய்திருந்த கதை தான் சர்கார் என்ற பெயரில் முருகதாஸ் இயக்கியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை துவங்கிய நிலையில் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறி, அது தொடர்பான மனுவையும் நீதிபதி சுந்தரிடம் சமர்ப்பித்தார்.மேலும், படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த படத்தின் கதைக்காக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு ஒரு தொகை வழங்கபட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சர்காரின் கதைக்கும் ‘செங்கோலின்’ கதைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.