தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள் அனைவருமே துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்களாக தான் இருப்பார்கள். அப்படி துணை இயக்குனராக பணியாற்றிய போது ஒரு சில படங்களில் சிறு வேடத்தில் வந்து செல்வார்கள் சங்கர், எஸ் ஜே சூர்யா, கௌதம் மேனன், ப ரஞ்சித், வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள், துணை இயக்குனராக பணியற்றிய போது சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அந்த வகையில் துணை இயக்குனராக இருந்த போது சினிமாவில் சிறு காட்சியில் தோன்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார் முருகதாஸ்.
இயக்குனர் ஏ. ஆர்.முருக தாஸ் 2001 இல் வெளியான தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்.மேலும் அந்த அஜித்திற்கு தல என்ற பெயர் வர காரணமாகவும் இருந்தவர். இதுவரை தமிழில் இவர் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக இருந்த ஏ ஆர் முருகதாஸ் முதலில் ஒரு வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
பின்னர் ரட்சகன், குஷி போன்ற படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும் முருகதாஸ் சில படங்களிலும் தலை காண்பித்துள்ளார்.நடிகர் அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பூச்சூடவா’ என்று படத்தில் நடிகர் மணிவண்ணனுடன் ஒரு சிறு காமெடி காட்சியில் நடித்திருப்பார் முருகதாஸ். அந்த படத்தில் சரியாக 25.12 நிமிடத்தில் அந்த படத்தில் தோன்றியிருப்பர் முருகதாஸ்.
இதே படத்தில் சிம்ரன் வீட்டில் சர்வராக நடித்து இருப்பார். அப்போது நாகேஷ் இவரது பெயரை கேட்க முருகதாஸ் என்று சொல்லுவார். இந்த வீடியோவை தற்போது முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு பின்னர் தீனா படத்தை இயக்கிய முருகதாஸ், பின்னர் விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். அதில் சிம்ரனை தான் நாயகியாக போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.