இய்குனார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

Advertisement

பரபரப்பாக போய் கொண்டிருந்த இந்த விவகாரத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாசிற்கு பல்வேறு நெருக்கடிகள் வந்தன. இயக்குனர் வருண் ராஜேந்திரன் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ‘செங்கோல்’ என்ற கதையை திருடி முருகதாஸ் ‘சர்கார்’ படத்தை எடுத்துள்ளார் என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கபட்டிருந்தது.

ஆனால், இயக்குனர் முருகதாஸ் சர்கார் கதை தன்னுடைய சொந்த கதை என்றும் நடிகர் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தார்.ஆனால், சர்கார் கதை வருணுடையது என்று அணித்தனமாக இருந்த பாக்கியராஜ், வருணின் பெயரை படத்தின் டைட்டில் கார்டிலாவது போட வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தார்.

Advertisement

இந்நிலையில் சற்றுமுன்னர் நீதிபதியிடம் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறி, அது தொடர்பான மனுவையும் நீதிபதி சுந்தரிடம் சமர்ப்பித்தார்.மேலும், படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Advertisement