கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் சில நாட்களுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(அக்டோபர் 2) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisement

திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தனது 17 வயதிலேயே “மாங்கல்யா பல்லக்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து இளம் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர். அதன் பின்னர் மலையாளத்தில் பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்தலும் மலையாளத்தில் ஒரு பிரபல இசையமைப்பாளராகவே திகழ்ந்து வந்தார். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தனது மனைவி மற்றும் தனது 2 வயது மகளுடன் காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பாலா பாஸ்கரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். விபத்தில் படு காயம் ஏற்பட்ட பாலா பாஸ்கர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காயம் குணமடைந்து வந்த நிலையில் இன்று நள்ளிரவு 1,மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Advertisement