இந்த படத்துக்கு எல்லாம் நான் இசையமைக்கலனு நெனச்சங்க, அதுக்கு காரணம் இதான் – தேவா சொன்ன உருக்கமான கதை.

0
241
deva
- Advertisement -

90 காலகட்டத்தை இசையால் ஆட்டி படைத்த தேனிசை தென்றல் தேவாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கூறும் வாழ்த்துக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார்.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான். அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இருந்து ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார்.

- Advertisement -

தேவாவின் இசைப்பயணம்:

அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார். பின் மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜ் இடம் இருந்து தேவா கற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார்.

தேவா இசையமைத்த முதல் படம்:

பின் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தில் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களுக்கு இசை அமைத்தார். மேலும், இவர் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பாடியிருக்கிறார். சொல்லப் போனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த தேவாவின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. ஆரம்பத்தில் இவரை பலரும் தேவா என்று தான் அழைத்தார்கள். பின் இவருடைய இசையால் தேனிசைத் தென்றல் தேவா என்று அழைக்கப்பட்டார்.

-விளம்பரம்-

அது மட்டுமல்லாமல் 1990 முதல் 1999 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் தேவா பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதில்

  • 1991ஆம் ஆண்டு – 16 படங்கள்
  • 1992ஆம் ஆண்டு – 25 படங்கள்
  • 1993ஆம் ஆண்டு – 22 படங்கள்
  • 1994ஆம் ஆண்டு – 29 படங்கள்
  • 1995ஆம் ஆண்டு – 28 படங்கள்
  • 1996ஆம் ஆண்டு – 26 படங்கள்
  • 1997ஆம் ஆண்டு – 34 படங்கள்
  • 1998ஆம் ஆண்டு – 21 படங்கள்
  • 1999ஆம் ஆண்டு – 26 படங்கள்

தேவா அளித்த பேட்டி:

அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் கானா பாடல் பாடுபவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் மெல்லிசை பாடல்களையும் பல பாடியிருக்கிறார். இது குறித்து பேட்டியில் அவர் கூறியிருப்பது, நேருக்கு நேர், குஷி, முகவரி, காளி போன்ற படங்களில் எல்லாம் நான் பாடியிருக்கிறேன். ஆனால், இது பலருக்குமே தெரியாது. ஒரு முறை லண்டனில் ஒரு கச்சேரியில் நான் இசையமைத்த பாடல்களை கேட்டிருந்தார்கள். நான் எழுதி கொடுத்தேன். அவர்கள், நீங்கள் இசையமைத்த பாடல்களை கொடுத்தால்தான் நன்றாக இருக்கும் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை கொடுக்க வேண்டாம். நேருக்கு நேர், முகவரி எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கிறீர்களே என்று கேட்டார்.

தேவா பிறந்தநாள்:

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை நான்தான் இசைத்தேன் என்று சொன்னவுடன் அவரால் நம்ப முடியவில்லை. நீங்கள் கானா தானே பாடுவீர்கள்? என்று கேட்டார். இல்லை நான் தான் பண்ணினேன் என்று சொன்னேன். இப்படி பலருமே நான் கானா மட்டும்தான் பாடுவேன் என்று பிராண்ட் பண்ணிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கானா மற்றும் மெலோடி இரண்டிலுமே கொடிகட்டி பறந்தவர். அனைத்து விதத்திலும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர் தேவாவின் பிறந்தநாள் இன்று. அவர் என்றும் நலமுடனும் இசையுடனும் நன்றாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement