கங்கை அமரன்கிட்ட இருந்து வந்த அந்த வார்த்தையால – இசையமைப்பாளர் தீனா வேதனை.

0
433
Gangaiamaran
- Advertisement -

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் குறித்து தினா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதை எடுத்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். பின் வழக்கு தள்ளுபடி செய்து சில தினங்களுக்கு முன் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தீனா போட்டியிட்டு இருந்தார். இவரை எதிர்த்து சபேஷ் நின்றார். இறுதியில் இந்த தேர்தலில் சபேஷ் வெற்றி பெற்று தலைவரானார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் தினா தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று இளையராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக தினா மீது சங்க உறுப்பினர்கள் சிலர் வழக்கும் தொடர்ந்து இருந்தார்கள். பின் தினா மீது நிறைய குற்றச்சாட்டுகளை கங்கை அமரன் வைத்திருந்தார். இதெல்லாம் மிகப்பெரிய அளவில் கலவரங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் தினா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர். உறுப்பினர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் நான் சங்க நிர்வாகத்தில் இருக்கணும் என்று ஆசைப்பட்டு இருந்தேன்.

- Advertisement -

தினா அளித்த பேட்டி:

என்னுடைய பதவி காலத்தில் என்னால் முடிந்த விஷயங்களை உறுப்பினர்களுக்காக பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் நான் போட்டியிட்டேன். என்னை பிடிக்காத சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் என்னை போட்டியிட விடாமல் தடுக்கணும் என்று நினைத்தார்கள். பொய்யான ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் சங்கத்தின் விதிமுறையிலேயே கிடையாது. யூனியன் அலுவலகத்தில் முன்னாள் தலைவர்களின் பெயர் பட்டியலை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

சங்க தேர்தல் குறித்து சொன்னது:

ஒரு சிலர் பத்து வருடம் வரை தலைவராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் நானும் நிர்வாகத்தில் இருக்கணும் என்று ஆசைப்பட்டு போட்டியிட்டேன். என்னை பிடிக்காத அந்த குரூப் தான் என்னைப் பற்றி இளையராஜாவிடம் தப்பு தப்பாக சொல்லி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர் என்னிடம் பேசினார். நான் என் தரப்பு நியாயத்தை அவரிடம் சொன்னேன். ஆனாலும், அவர் மறுபடியும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆடியோ அனுப்பினார். இருந்தும் அவரைப் பற்றி எங்கேயும் யாரிடமும் நான் தவறாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கங்கை அமரன் குறிப்பிட்ட மாதிரி எல்லாம் நான் இளையராஜாவை பேசவே இல்லை. இதுதான் உண்மை. ஆனால், கங்கை அமரன் தேர்தலுக்கு முந்தைய நாள் சங்க கட்டிடத்தில் வைத்து என்னை அவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

கங்கை அமரன் குறித்து சொன்னது:

அவர் பேசிய வார்த்தை என்ன ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. இரண்டு நாள் நான் தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் எனக்கு அவ்ளோ வலியை தந்திருக்கிறது. கொரோனா காலத்தில் நான் சங்க நிதி மோசடி செய்து விட்டதாக சொல்கிறார்கள். அந்த சமயத்தில் உறுப்பினர்களுக்கு உதவி எல்லாம் செய்தோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் எல்லா உறுப்பினர்களும் சங்கத்துக்கு வந்து உதவியை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சார்பாக மற்றவர்கள் மூலம் அனுப்பி வைத்தோம். உதவிகள் செய்தது குறித்து எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது.

பண மோசடி குறித்து சொன்னது:

தேர்தல் விவகாரம் கோர்ட்டுக்கு போனபோது அங்கேயும் வரவு செலவெல்லாம் காட்டி இருக்கிறோம். அப்படி இருந்தும் ஊழல் நடந்திருக்கிறது என்றால் பொறுப்புக்கு வந்தவர்கள் அதை கண்டுபிடிங்கள். மேலும், எனக்கு ஆதரவாக இருந்தவங்கள் எல்லாம் மிரட்டி ஓட்டு போட வேண்டாம் என்று கங்கை அமரன் சொல்லியிருந்தார். இதுதான் என்னுடைய தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால், சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து தான் இறங்கி இருக்கிறேன் தவிர இசைக் கலைஞர்கள் அரைக்கட்டளையின் ட்ரஷ்டில் உறுப்பினர்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் ஏதாவது ஒரு வழியில் சங்கத்துடன் தொடர்பில் தான் இருப்பேன். அதோடு அடுத்து நடக்க இருக்கும் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.

Advertisement