நீயா நானாவில் வந்த சிறுவனுக்கு நேரில் சென்று சொன்னபடியே பைக்கை பரிசாக கொடுத்த தமன்

0
309
- Advertisement -

நீயா நானா சிறுவனுக்கு, இசை அமைப்பாளர் தமன் இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து சொன்ன வார்த்தையை காப்பாற்றி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, தயாரித்த ‘வாழை’ படம் வெளியானது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து தான் சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகள் மற்றும் கஷ்டங்களை மையமாக வைத்து வாழை படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

வாழை படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இவர் பங்கேற்றுக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘நீயா நானா’ நிகழ்ச்சி தான். சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி சிறுவன்:

எனவே, சமீபத்தில் ‘வாழை’ படம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள். அதில் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவன், தான் பழக்கடையில் வேலை செய்வதால், மூட்டை தூக்கும் வேலைகள் செய்வேன் என்று கூறினார். மேலும், தான் தூக்கம் மூட்டைகள் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். அதனால், அவருக்கு தோள்பட்டை வலி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

சிறுவனின் சோகம்:

பின் காலை 5:30 மணியில் இருந்து 10 மணி வரை வேலை செய்வதாகவும். அதற்குப் பிறகு, சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விட்டால் மூன்று கிலோமீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவதாகவும் கூறியிருந்தார். அப்படி நடந்து போகும்போது, நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வந்து அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே போவேன் என்றார். இந்த சிறுவன் பேசிய வீடியோ வைரலான நிலையில், சிறுவனுக்கு உதவ இசையமைப்பாளர் தமன் முன் வந்தார்.

-விளம்பரம்-

சிறுவனுக்கு உதவ முன்வந்த தமன்:

அதாவது, இந்த சிவனுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை உதவியாக கொடுக்க விரும்புகிறேன். அது அந்த சிறுவன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் அவங்க அம்மாவை போய் பார்க்க உதவும். அதனால் அந்த பையனின் விவரங்களை எனக்கு கிடைக்குமாறு செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது, இசையமைப்பாளர் தமன் அவர் சொன்னது போல், அந்த சிறுவனுக்கு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அம்மா தான் எமோஷன் அவர் செய்த தியாகத்தை காப்பாற்ற வேண்டும் என்று சிறுவனிடம் சொன்னார். மேலும், சிறுவனின் தாயிடம், உங்கள் பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளார்.

சொன்ன வார்த்தையை காப்பாற்றிய தமன்:

பின் தமன், இந்த சிறுவன் பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அம்மா என்றதும் நான் எமோஷன் ஆகிவிட்டேன். சிறிய பையன், ரொம்ப தூரம் நடந்து போவதால் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு என்று கூறினார். பின் இந்த சிறுவனை பார்க்கும்போது சிறுவயதில் என்னை பார்ப்பது போல் தோன்றியது. எனக்கு எப்படி எல்லாரும் உதவி செய்தார்களோ, அதேபோல் இந்த சிறுவனுக்கு நான் உதவி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்குப் பிறகு பேசிய சிறுவனின் தாய், தமன் சார் என் பையன் இடத்தில் இருந்து யோசித்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement