ராயல்டி கேட்டதற்கான நோக்கம் இது தான்..!இளையராஜாவை திட்டி தீர்த்த அனைவரும் தற்போது பாராட்டு கன்றனர்.

0
1710
illayaraja
- Advertisement -

பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம், அந்த பத்திரத்தையும் இளையராஜா ஒப்படைத்துவிட்டார்.

-விளம்பரம்-

ilayaraja

- Advertisement -

இளையராஜா பாடல்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட, அதாவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், சித்ரா உள்ளிட்ட பிரிவினருக்கு வருடத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணமும். பி பிரிவினருக்கு ரூ.15 லட்சமும், சி பிரிவினருக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய பாடகர்கள் பி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் மேடை கச்சேரிகளில் பாடுபவர்கள் சி பிரிவு என்றும் வகைப்படுத்தி உள்ளனர். இந்தியாவில் மைதானங்களில் நடக்கும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாடுவதற்கு ரூ.75 ஆயிரமும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பாட ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் ஓட்டல்களில் பாட ரூ.30 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Illayaraja

கோயில்கள், திருமண விழாக்கள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ராயல்டி வசூலிக்கப்படுவதில்லை. ராயல்டியை வசூல் செய்யும் உரிமையை இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு இளையராஜா வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இளையராஜா, பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.

அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.

Advertisement