மனைவியை விவாகரத்து செய்து 1.5 ஆண்டுகளில் இரண்டாம் திருமணத்திற்கு தயாரான இமான் – பொண்ணு யார் தெரியுமா ?

0
693
Imman
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

பின் அதனை தொடர்ந்து இமான் பல படங்களில் இசைத்திருக்கிறார். மேலும், இவர் மருது, கயல், ஜீவா, சிகரம்தொடு, கும்கி, மைனா என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றினார். இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் விஜய், அஜித் துவங்கி சிவகார்த்தியன் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : என்னது, பிக் பாஸ் அல்டிமேட் Live கிடையாதா ? பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய வனிதா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இமானின் திரைப்பயணம்:

சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லவரை பெற்றிருந்தது. இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.

இமானின் குடும்பம் பற்றிய தகவல்:

கடந்த ஆகஸ்ட் மாதம் கூட தனது மகள் Blessicaவின் பிறந்தநாளின் போது தன் மகளின் புகைப்படம் ஒன்றை இமான் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து இமான் கூறி இருப்பது, என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

-விளம்பரம்-

இமானின் விவாகரத்து விவகாரம்:

நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இமானின் இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இமானின் மறுமணம் குறித்த தகவல்:

இந்த நிலையில் தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த உமா என்பவருக்கும் இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இது பெரியவர்கள் பேசி நிச்சயக்கப்பட்ட திருமணம் என்று கூறுகிறார்கள். இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இதுதொடர்பாக பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது தொடர்பாக இமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறுகிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உங்களுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கேட்டு வருகின்றனர்.

Advertisement