என்னது, பிக் பாஸ் அல்டிமேட் Live கிடையாதா ? பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய வனிதா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
428
vanitha
- Advertisement -

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை நெருங்கி இருக்கிறது. முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த்னர். வனிதா வெளியேறிய பின்னர் இந்த சீசனில் சுவாரஸ்யமே இல்லை என்று பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பி கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

விக்ரம் படம் ஷூட்டிங்கை காரணம் காட்டி இந்த சீசனில் இருந்து வெளியேறினார் கமல். கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.பின் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார்.

- Advertisement -

வெளியேறிய வனிதா :

வெளியேறிய காரணம் குறித்து கூறிய வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் தப்பான டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. என்னை யாரும் ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லவில்லை. நீ செய்தது சரி தான் என்று என்னை பாராட்டினார்கள்.இரண்டு வாரங்களாகவே எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிற மாதிரி தோன்றியது. கமல் சார் வந்து கேள்வி கேட்காமல் நீங்க பண்ணுவது தான் சரி என்று சொல்வது போல நடந்துகொண்டார்.

பிக் பாஸை குறை கூறிய வனிதா :

எனக்கும், ஒரு வேளை என்னை வெளியே நல்லவளாக காண்பிக்கிறார்களோ, இல்லை நான் செய்வது தான் சரி என்று சொல்கிறார்களோ என்று என் மனதுக்குள் தோன்றியது. அதே போல இந்த நிகழ்ச்சியில் கேவலமான நபர்கள் விளையாடுகிறார்கள் அவர்களுடன் விளையாடி என் மரியாதையை குறைத்துகொள்ள முடியாது. பிக் பாஸும் கேவலமான கேம்களை வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டி வெளியேறினார் வனிதா.

-விளம்பரம்-

எரிச்சலூட்டும் பயித்தியக்கார வீடு :

இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ள வனிதா, எரிச்சலூட்டும் பைத்தியக்கார வீட்டில் இருந்து நான் வெளியேறியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சி இப்போ அதன் பொழுதுபோக்கு அம்சத்தை இழந்துவிட்டது. யாரும் எதிர்த்து கேட்க முடியாத ஒரு சிக்கலான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. வெளியில் வந்த பின்னரும் அதன் விளைவுகளில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன்.

பிக் பாஸ் Live கிடையாது :

அந்த எனது உள்ளுணர்வை நம்பி, நல்லறிவு மற்றும் அமைதியைத் தேர்ந்தெடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், அபிராமி அவளுக்காக பேசியதை ஒளிபரப்பவில்லை. நான் சொன்னது கூட ஒளிபரப்பவில்லை. அது ஒன்றும் Live இல்லை, சுவாரசியம் மற்றும் சர்ச்சைகளை கூட்ட எடிட் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகிறது என்று போட்டு உடைத்துள்ளார் வனிதா.

Advertisement