கோலிவுட்டில் நூறு படங்களுக்கும் மேல் இசையமைத்து, வெற்றிகரமாக தன் இசைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார், இமான். `சீமராஜா’ படத்தின் பாடல்கள், `விஸ்வாசம்’ படத்தின் அப்டேட்ஸ் எனப் பலவற்றை நம்மிடையே பகிர்கிறார்.  

Advertisement

விஸ்வாசம்’ படத்துக்கான வேலைகள் எந்தளவுல இருக்கு?”

“ரெண்டு பாடல்கள் முடிச்சிருக்கோம். தல படத்துல பிஜிஎம் ரொம்ப முக்கியம். அதுக்கான வேலைகளும் மற்ற பாடல்களுக்குமான வேலைகளும் பரபரப்பா போயிட்டு இருக்கு. தல ரசிகர்களுக்காக ஒரு மாஸ் ஆல்பம் ரெடியாகிட்டே இருக்கு. அஜித் சார், படத்துல அவருடைய ஓப்பனிங் சாங்கைக் கேட்டுட்டு என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட் வர சொல்லியிருந்தார். என்னைப் பார்த்தவர், எதுவும் பேசாம கட்டிப்பிடிச்சுக்கிட்டார். மொத்த யூனிட்டுமே ரொம்ப ஹேப்பி. பொதுவா, நம்முடைய பாட்டை எப்படி யூஸ் பண்றாங்கனு தெரிஞ்சுக்க, முதன்முறையா நான் ஷூட்டிங் ஸ்பாட் போய்ப் பார்த்த படம், `தமிழன்’. அதுக்குப் பிறகு, நான் ஷூட்டிங் ஸ்பாட்போய்ப் பார்த்த படம்னா, `விஸ்வாசம்’தான். என்னுடைய இசையில அஜித் சார் டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

Advertisement

“ரெண்டு அஜித்தை எப்படிச் சமாளிச்சீங்க?”

Advertisement

“இதுவரைக்கும் சிட்டி, கிராமம்னு தனித் தனியாதான் இசையமைச்சிருக்கேன். இந்தப் படத்துல ரெண்டும் கலந்துகட்டி இருக்கும். அது ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்தாலே தெரிஞ்சிருக்கும். அதுக்குத் தகுந்த இசையமைக்கிறது எனக்கு ரொம்பவே சவாலா இருந்தது. இந்த சவால்களுக்கு நடுவுல பிஜிஎம் வேற இருக்கு. அதுவும் இரட்டை தல! இதையெல்லாம் மனசுல வெச்சுதான் பிஜிஎம்ல வொர்க் பண்ணியிருக்கேன். இதற்கான வேலைகளும் கொஞ்சம் சவாலாதான் இருக்கு. அஜித் சார் ரசிகர்களோட சேர்த்து நானும் வர்ற பொங்கலுக்காக வெயிட்டிங்!”

Advertisement