flipkart-ல் Apple வாட்சை ஆர்டர் செய்த கைதி பட இசையமைப்பாளர் – கடைசியில் என்ன வந்துள்ளது பாருங்க பாவம்.

0
1259
sam
- Advertisement -

ஆன் லைன் ஷாப்பிங் நிறுவனங்களான flipkart, Amazon போன்ற தளங்களில் அடிக்கடி சில ஏமாற்று வேலைகள் நடப்பது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் Flipkart தளத்தில் ஆப்பிள் வாட்ச்சை ஆர்டர் செய்துள்ள பிரபல இசையமைப்பாளருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். விக்ரம் வேதா, கைதி போன்ற படங்களில் இவர் அமைத்த பின்னணி இசையை பாராட்டாத ரசிகர்களே இருக்க முடியாது.

-விளம்பரம்-

தற்போது வெங்கட் பிரபு மற்றும் சிம்பு தேவன் இணையும் கசட தபற , மாதவன் நடிக்கும் நம்பி எஃபக்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது தனது சகோதர் ஒருவருக்காக Apple வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். ஆனால், apple வாட்ச்சுக்கு பதிலாக கற்கள் இருந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த ஒரு பதிலும் இல்லை எனவ flipkart-ல் எதையும் வாங்காதீர்கள் என்று கூறியுள்ளார் சாம் சி எஸ். இதுபோன்ற சம்பவங்கள் flipkartல் நடப்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏற்கனவே நடிகர் நகுலுக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் நகுல் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எதாவது பரிசளிக்கலாம் என்று நினைத்துள்ளார். இதனால் பிரபல ஆன் லைன் நிறுவனமான flipkartல் 1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார் நகுல். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.ஆனால், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அது போலியான ஐ போன் என்று தெரியவந்துள்ளது. இதனால் flipkart சேவை மையத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க மறுத்ததால் ட்விட்டர் பக்கத்தில் புலம்பினார் நகுல். பின்னர் எப்படியா அவருக்கு பணம் திரும்ப கிடைத்துவிட்டது. அதே போல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த ஹெட்போன் டெலிவரி ஆனதும் அதை பிரித்து பார்த்த போது ஹெட்போனுக்கு பதிலாக துருபிடித்த இரும்புத் துண்டுகள் இருந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement