2000த்தின் துவக்கத்தில் ஒளிபரப்பாகிய சிறுவர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒரு மைடியர் பூதம். இந்த சீரியல் குழந்தைகள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சிரியலாக அமைந்தது. சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ரசித்தனர். பள்ளி முடிந்தவடன் எப்படியாவது வேகமாக வீட்டிற்கு ஓடிவந்து மைடியர் பூதம் சீரியலை பார்த்து விடவேண்டும் என நம்மில் பலர் ஓடி வந்திருப்போம். குழந்தைகளுக்கு பிடித்தமான சொல்வதை செய்யும் பூதம் ஒன்று செய்யும் சுட்டித்தனம் தான் இந்த சீரியலின் கதை. கிட்டத்தட்ட 900 எபிஸோடுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளது இந்த சீரியல்.

தோனி கபடிக்குழு படத்தில் அபிலேஷ்

இந்த சீரியலில் நடித்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவ்வளவு ஏன் ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் மகளாக கூட நடித்து இருந்தார்.

Advertisement

அதே போல மை டியர் பூதம் தொடரில் பூதமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனும் தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். அவருடைய பெயர் அபிலாஷ். இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மைடியர் பூதம் சீரியலில் நடிக்கும் முன்னர் பல தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இவர் மைடியர் பூதம் சீரியலை தவற வீட்டுக்கு வீடு லூட்டி, விக்ரமாதித்யன், மகள், கோகுலத்தில் சீதை, அபிராமி, கொடி முல்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது வளர்ந்து பெரிய ஆளாக மாறிவிட்ட அபிலாஷ் சில தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் வெளியான தோனி கபடி குழு, நாகேஷ் திரையரங்கம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார் அபிலேஸ். இப்படி ஒரு நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement