சென்னையில் 3000 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய் கறி விநியோகம் செய்து அசத்தி வரும் குழு – யார் இவர்கள் தெரியுமா ?

0
728
- Advertisement -

நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் தான் இந்த கடைசி விவசாயி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் இயக்கி யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த படத்தின் வேலை தொடங்கப்பட்டது. பின் படம் தயாரான நிலையில் கொரோனா கோளாறு காரணமாக படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை.

-விளம்பரம்-

பின் சமீபத்தில் தான் இந்த படம் திரையரங்கில் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. அதோடு படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள். மேலும், படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது,

- Advertisement -

கடைசி விவசாயி படம் பற்றிய தகவல்:

ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை காண்பித்து இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர் ரேச்சல் ரெபேக்கா. இன்றைய காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் அதிலிருந்து விலகி நகரத்தை நோக்கி படையெடுத்தால் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

my Harvest farms பற்றிய தகவல்:

இந்த நிலையில் இந்த படத்தை 60 விவசாயிகளுக்கு திரையிட்டுக் காட்டி இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘myHarvest farms’ என்ற இளம் விவசாயிகள் தான் இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள். ‘myHarvest farms’ யார் என்று பார்த்தால், சென்னையில் சிறிதளவில் தொடங்கிய ‘myHarvest farms’ கடந்த மூன்று வருடங்களாக நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். அதோடு இதில் 150 இளம் விவசாயிகளுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கடைசி விவசாயி படம் பார்த்த myHarvest farms:

அவர்களை உற்சாகப்படுத்தவும் அழிவு நிலையில் உள்ள விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உத்வேகம் கொடுக்கவும் கடைசி விவசாயி படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு myHarvest farmsக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து myHarvest farms’ நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின் கூறியிருப்பது, எங்களுடன் 60 விவசாயிகள் இந்த சிறப்பு திரையிடலில் பங்கேற்றனர். அதில் 12 பெண் விவசாயிகள் என்பது கூடுதல் சிறப்பான விஷயம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விவசாயிகள் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் கடைசி விவசாயி படத்தை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினருக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாக முக்கிய வேடத்தில் நடித்த Dr.ரேச்சல் ரெபெக்கா, துணை இயக்குநர் சரத் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டு இருந்தனர். பின் அவர்கள் வந்திருந்த விவசாயிகளுடன் உரையாடி இருந்தனர். மேலும், இவர்களுடன் இயக்குனர் வசந்த், பாடகி ரெஹானா, நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிசரன், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன், ரசிகர்கள் என பலரும் கடைசி விவசாயி படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.

Advertisement