ராஸ்கேல்ஸ் இத செஞ்சு இருந்தா ஜெய்ச்சி இருக்கலாம் – இந்திய அணியின் தோல்வி குறித்து உதயநிதி பட விழாவில் பேசிய மிஸ்கின்

0
346
myskkin
- Advertisement -

உலக கோப்பை T20 தொடரில் இந்தியா தோற்றது குறித்து மிஸ்கின் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி சுற்றில் வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய 2வது அரையிறுதி போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் ராகுல் 5 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

-விளம்பரம்-

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்து 2வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரியுடன் 27 (28) ரன்களில் நடையை கட்டினார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிஸ்டருடன் அதிரடியை தொடங்கினாலும் திடீரென்று 14 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 75/3 என தடுமாறியது.

- Advertisement -

இதை தொடர்ந்து இந்தியாவை பாண்டியாவுடன் 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 50 (40) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (4) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை நங்கூரமாக நின்று கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63 (33) ரன்கள் விளாசி பினிஷிங் செய்து காப்பாற்றியதால் தப்பியது இந்தியா.

இறுதியில் 20 ஓவர்களில் 168/6 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 169 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய ஓப்பனிங் ஜோடி முதல் பந்திலிருந்தே இந்திய பவுலர்களை செட்டிலாக விடாமல் சரமாரியாக அடித்து நொறுக்கியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து பல இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து இயக்குனர் மிஸ்கின் ‘கலக தலைவர்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசி இருக்கிறார். நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் ‘கலக தலைவன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை உள்ள சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அருண் ராஜா காமராஜ், மிஸ்கின் மாறி செல்வராஜ், போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மிஸ்கின் ‘இந்தியா தோற்றுவிட்டதால் மிகவும் சோகமாகிவிட்டேன் நன்றாகத்தான் ஆடினார்கள் ராஸ்கல்ஸ் ஒரு 200 அடித்திருந்தால் வென்றே இருக்கலாம் அதுவும் ஒரு விக்கெட் கூட இழக்காமல் நம்மை தோற்கடித்து விட்டார்கள் மிகவும் சோகமாக இருந்தேன் அதன் பின்னர் என்று ஒரு நல்ல விழாவிற்கு செல்ல போகிறோம் என்று சந்தோஷமாகி வந்து விட்டேன்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement