நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக மிஸ்கின் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி இருந்தார்கள். குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள்.
கங்குவா படம்:
மேலும், கங்குவா படத்தை விமர்சிப்பதை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும் ஜோதிகா, சூரி, சுசீந்திரன், சரவணன் பட பல பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மிஸ்கின் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது,
எஸ்.பி சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகிய உருவாகியிருக்கும் படம் அலங்கு.
விழாவில் மிஸ்கின்:
இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட மிஷ்கின், சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகியிருந்தது. அந்த படத்தை ரொம்ப மோசமாக விமர்சித்து இருந்தார்கள். படம் நன்றாக இல்லை என்பதால் ரசிகர்கள் அதிகமான கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது அவர்களுடைய உரிமை தான். ஆனால், படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும். சொல்வதற்கு நான் பயப்படவில்லை. நான் கங்குவா படம் பார்க்கவில்லை.
கங்குவா குறித்து சொன்னது:
இருந்தாலும் அந்த படத்தைப் பற்றி விமர்சனங்கள் வந்தது. இன்னும் நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களை பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல அழகான நடிகரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடன் சிவாஜி, எம்ஜிஆர் இல்லை. ஆனால், அவர்களுடன் பணிப்பாற்றிய சிவகுமார் என்ற ஒரு மனிதர் இருக்கிறார். அவர் எவ்வளவு முக்கியமான ஒரு மனிதர். அவருடைய வீட்டிலிருந்து வந்த இரண்டு குழந்தைகளுமே ரொம்ப நல்லவர்கள்.
சூர்யா பற்றி சொன்னது:
நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக பேசுவதை வைத்து அடுத்து நான் சூர்யாவிற்கு கதை சொல்லப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லப்போவதில்லை. என்னிடம் அவர்கள் கேட்டாலுமே படம் பண்ண போவதில்லை. ஆனால், நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.