இளையராஜா குறித்து மிஸ்கின் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் இளையராஜா குறித்து மிஸ்கின் பேசி இருந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
பாட்டில் ராதா படம்:
இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த தங்கலான் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பாட்டில் ராதா.
பாட்டில் ராதா பட விழா:
இந்த படத்தை தினகரன் சிவகலிங்கம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம்
ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஸ்கின், லிங்குசாமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
விழாவில் மிஸ்கின் சொன்னது:
அப்போது விழாவில் பேசிய மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. மன வருத்தம் அதிகமாக உள்ளவர்கள் குடிப்பார்கள். அதற்குப்பின் அமைதியாகி விடுவார்கள். நானுமே ஒரு பெரும் குடிகாரன் தான். ஆனால், எனக்கு வாழ்க்கையில் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு அதைவிட மிகப்பெரிய போதையும் இருக்கிறது. அது தான் சினிமா. இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை.
இளையராஜா குறித்து சொன்னது:
அதைவிட இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை. பலரையும் குடிகாரனாக மாற்றியது அவர்தான் என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இப்படி இவர் மேடையில் ஜாலியாக பேசி இருந்தாலும் தற்போது இவருடைய பேச்சு தான் இணையத்தில்
சர்ச்சையாக மாறியிருக்கிறது. சோசியல் மீடியால் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.