என் படத்த 4 முறை பாத்தியா? அப்போ நீ ஒரு,,பங்கமாக கலாய்த்த மிஸ்கின். வீடியோ இதோ.

0
13410
myskin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் வித்யாசமான முறையில் படங்களை இயக்குவதில் இயக்குனர் மிஸ்கின் கைதேர்ந்தவர். இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் பாணியில் தான் இருக்கும். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் ‘சைக்கோ’.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் நித்யா மேனன், அதிதிராவ், ராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கண் தெரியாத நபராக உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு இளைராஜா அவர்கள் இசை அமைத்து உள்ளார். சைக்கோ திரைப்படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சைக்கோ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனாலே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வந்தது. இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் சமீபத்தில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : பாஆஆ , பொண்டாட்டி இப்போவே கோடையை கொண்டு வந்துட்ட. நமிதாவின் புகைப்படத்தை பார்த்து அசந்து போன கணவர்.

-விளம்பரம்-

அதில் அவர்கள் கடுமையாக தன்னுடைய படத்தையே கலாய்த்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, ஒருவர் என்னிடம் வந்து சார் நான் சைக்கோ படத்தை எத்தனை முறை பார்த்தேன் தெரியுமா? என்று கேட்டார். நானும் உன்னுடன் வைத்துக் கொள் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் நான்கு முறை சைக்கோ படம் பார்த்தேன் சார் என்று சொன்னார். அதற்கு நான் உனக்கு வேற வேலையே இல்லை. அதனால் தான் இத்தனை முறை படம் பார்த்திருக்கிறாய். அந்த படத்துல ஒரு ம** இல்ல இந்த படத்தை ஒரு முறை பார்த்தாலே போதும் சைக்கோ ஆகி விடுவாய்.

நீ இத்தனை முறை பார்த்து உள்ளாய் உனக்குள்ளே இருக்கிற சைக்கோ குணம் வெளியே வந்து இருக்கும் முதலில் ஹாஸ்பிடல் போய் பாரு என்று சொன்னேன் என்று கூறினார். இவர் இப்படி கூறியதைக் கேட்டு மேடையில் உள்ள பலரும் சிரிக்கத் தொடங்கினர். பின் அந்த நிகழ்ச்சியே கலகலப்பாக மாறியது. இப்படி மிஸ்கின் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் கமென்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement