சந்தோஷ் நாராயணன் இசை, அசல் கோளாறு வரிகள், பிரபுதேவாவின் steps வடிவேலுவின் குரல் – நாய் சேகரின் முதல் பாடல்.

0
432
naai sekar
- Advertisement -

வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

இவர் தமிழில் ரஜினி,கமல்,விஜய்,அஜித், சத்யராஜ்,பிரபு,விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும், இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்.

- Advertisement -

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார்.பின் கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது வடிவேலு அவர்கள் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டில் சதீஷ் கதாநாயகனாக நடித்து கொண்டு இருந்தார். அந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இப்படி பல பிரச்சனைகளை கடந்து தான் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது.

-விளம்பரம்-

இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நாயகனாக நடிக்கும் எந்த பணத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து பிக் பாஸ் போட்டியாளர் அசல் கோளாறு பாடல் வரிகளை எழுதி இருக்கும் இந்த பாடலை வடிவேலுவே பாடியிருக்கிறார். மேலும், இந்த பாடளுக்கு பிரபுதேவா நடனம் வைத்திருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து வடிவேலுவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement