முத்துராசுவை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்த மாயன் – கடைசில இவர் தான் கொலையாளி.

0
8757
naam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுனில் ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் அதிரடியாக நீக்கினார்கள். தற்போது அவர்களுக்கு பதில் தற்போது வேறு நடிகைகள் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது.

இதையும் பாருங்க : 10 பேர் நின்னிட்டு இருந்தோம் ஆனால், என்ன பாத்ததும் விஜய் அண்ணன் – தலை கால் புரியாமல் ஆகியுள்ள கவின்.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் வில்லனாக இருந்த முத்து ராசாவை யாரோ சுட்டு கொன்றுவிட்டனர். மாயனின் கடைசித் தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, அவரைப் படாதபாடு படுத்தி வந்தவர்தான் இந்த முத்துராசு. இவரை முகமூடி அணிந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுவிட்டார்.’கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?’ என்ற கேள்விக்குப் பிறகு இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் கேள்வி, ‘முத்துராசுவைச் சுட்டது யாரு?’ என்பது தான்.

இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இன்று ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் முத்துராசுவை கொன்றது யார் என்ற ரகசியம் வெளியே வருகிறது. அதாவது முத்துராசுவை கொன்றது ஐஸ்வர்யாவின் அம்மா நாச்சியார் தானாம். அவரே இந்த உண்மையை மாயனிடம் கூறும் காட்சிகள் இன்றைய சீரியலில் இடம்பெறுகிறது. இதனால் ரசிகர்களின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement