10 பேர் நின்னிட்டு இருந்தோம் ஆனால், என்ன பாத்ததும் விஜய் அண்ணன் – தலை கால் புரியாமல் ஆகியுள்ள கவின்.

0
4173
kavin
- Advertisement -

பீஸ்ட் பட பூஜையில் விஜய்யை நேரில் சந்தித்த போது விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்து கவின் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். இதற்கு பிறகு அவர் சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். இப்படி ஒரு நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் கவின் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : தோனி பிறந்தநாள் ஸ்பெஷல் – இவர் தான் விபத்தில் உயிரிழந்த தோனியின் முதல் காதலியா ? விவரம் இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படம் ஒன்றில் நடிகர் கவினும் விஜய்க்கு அருகில் இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கவின் இந்த படத்தில் நடிக்கிறார் என்று குஷியாகிவிட்டனர். ஆனால், உண்மையில் இந்த படத்தில் உதவி இயக்குனராக கவின் பணியாற்றி இருக்கிறார். மேலும், சிவகார்த்திகேயன் மூலம் கவினுக்கு நெல்சன் நண்பரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is 1-222.jpg

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜையின் போது 10 நண்பர்கள் சென்று இருந்ததாகவும் அப்போது நெல்சன், விஜய்யிடம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த போது என்னிடம் மட்டும் ஹாய், கவின் என்று விஜய் பேசியதாகவும் மேலும் தனது நடிப்பில் வெளியான ‘அஸ்க் மாரோ’ என்கிற ஆல்பம் பாடலை பார்த்து ‘செம்மையா இருந்தது’ என விஜய் பாராட்டியதாகவும் இதனால் ஷிவங்கியை போல இது போதும் இது போதும் என்று கவின் குசியானதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement